CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Sunday, 4 October 2015

கற்றலில் குறைபாடு – Dyslexia சிறப்பு உளவியல் ஆலோசனை,,,,,http://mindzone.in/child-and-adolescence/

கற்றலில் குறைபாடு – Dyslexia சிறப்பு உளவியல் ஆலோசனை
=========================================================
கற்றலில் குறைபாடு – Dyslexia
டிஸ்லெக்சியா Dyslexia என்றால் என்ன?
Ø
மூளையில் உள்ள சில பிரச்னைகளால், இக்குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
Ø
இக்குழந்தைகளுக்கு, படிப்பதிலும் எழுதுவதிலும் சிரமங்கள் இருக்கும்.
Ø
இவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் அல்ல.
Ø
இவர்கள் புத்திசாலியாக, சில செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கலாம்.
Ø
இவர்களுக்கு எழுதுவதும் படிப்பதும் மட்டும்தான் கொஞ்சம் கடினமான காரியம்.
Ø
கடின உழைப்பும், சரியான வழிகாட்டுதலும் இருப்பின் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் படிக்கவும் எழுதவும் முடியும்.
டிஸ்லெக்சியா ஏன் ஏற்படுகிறது?
டிஸ்லெக்சியா ஏற்படும் விதங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. Traumatic Dyslexia
மூளையில் படித்தல், எழுதுதலைக் கட்டுப்படுத்தும் பகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது காயம் காரணமாக ஏற்படும் குறைபாடு Traumatic Dyslexia என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாகச் சிறு குழந்தைகளிடம் அதிகம் காணப்படுவதில்லை
2. Primary Dyslexia -
பிறவியிலேயே மூளையின் இடப்பக்கத்தில் (Cerebral Cortex) ஏற்படும் தவறான வினையாக்கம், அல்லது அப்பகுதி சரிவர வேலை செய்யாமையின் காரணமாகப் படிப்பது, எழுதுவது இவற்றில் ஏற்படும் குறைபாடு, பரம்பரை பரம்பரையாக(Hereditary)., ஜீன்களின் மூலம் கடத்தப்படுகிறது இது 'Primary Dyslexia', என்று அழைக்கப்படுகிறது. இக்குறைபாடு உடையவர்களுக்கு எத்தனை வயதானாலும் எழுதுவதும் படிப்பதும் சிரமமாகவே இருக்கும். இது இருபாலாரிடமும் காணப்படும் குறைபாடு ஆகும்.
3. Secondary Dyslexia -
பிறவிக்கோளாறு இல்லாமல், ஹார்மோன்களின் சுரப்பின் காரணமாக உருவாவது Secondary Dyslexia என்று அழைக்கப்படுகிறது. இது சிறுவர்களிடம்தான் அதிகம் காணப்படும். இக்குறைபாடு வயதானால் குறைந்துவிடக்கூடும்.
கற்றுக்கொள்வது என்பது பல நிலைகளை உடையது.
ü
ஒலிகள் இணைந்து எப்படி வார்த்தைகளை உருவாக்குகிறது என்பதை உணர்தல்
ü
வடிவங்களைக் கவனித்து எழுத்துக்களை அறிதல்
ü
ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்குமான தொடர்பை உணர்ந்துகொள்ளுதல்
ü
ஒலிகளையும் , எழுத்துக்களையும் இணைத்து வார்த்தைகளாக்குதல்
ü
புத்தகத்தின் பக்கங்களில் வரிகளின் மீதான ஒழுங்கமைவு மற்றும் கட்டுப்பாடு. அதாவது ஒரு வரியைப் படித்தபின் அதற்கடுத்த வரி, அதற்கடுத்தது என்று வரிசையாகப் படிக்க இயலுதல்
ü
முன்பே அறிந்தவற்றையும், புதிதாகப் பார்ப்பவற்றையும் தொடர்பு படுத்த இயலுதல்
ü
புதிய கருத்துப் படிவங்கள், உருவகங்களை உருவாக்குதல், உத்திகளை உருவாக்குதல்
ü
பார்த்தவை, படித்தவைகளை நினைவில் நிறுத்துதல்
இவை அனைத்தும் சரிவர நடக்கும்பொழுதுதான், நாம் படிப்பது எழுதுவது போன்றவை நடக்கும். இவற்றில் சிலவற்றை நம்மால் செய்ய முடியவில்லை எனில், அச்செயல்பாட்டு சீர்குலைந்துவிடும். படிப்பது, எழுதுவது, நினைவு வைத்துக்கொள்வது இவற்றில் குறைபாடு உண்டாகும். டிஸ்லெக்சியாவால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு, முதல் இரண்டு மூன்று படிகளிலேயே தடுமாற்றம் உண்டாகிறது. அவர்களால் ஒலி வார்த்தைகளை உருவாக்குவதையும், வடிவங்களைக்கொண்டு தொடர்புகளை உணர்வதையும், பல ஆணைகளை ஒன்றாகக் கொடுக்கையில் அவற்றை வரிசையாகச் செயல்படுத்துவதையும் கிரகித்துக்கொள்ள இயலுவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் மேற்கொண்டு படிப்பது மிகுந்த கடினமான செயலாகி விடுகிறது.
குழந்தைகள் படிக்கையில் அ என்ற எழுத்துடன் து என்ற எழுத்தைச் சேர்த்தால் அது என்ற சொல் உருவாகும் என்பதைப் புரிந்துகொண்டு சொற்களைத் துவக்கத்தில் படிப்பார்கள். 'எழுத்துக்கூட்டிப்படி', 'வாய்விட்டுப் படி' என்று சிறுகுழந்தைகளை நாம் கூறுவது அதனால்தான். நாளடைவில் பலமுறை ஏற்கனவே பார்த்த சொற்களை ஒலிவடிவத்தை உணர்ந்து எழுத்துக்களைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நினைவாற்றலின் உதவியால் குழந்தைகளால் படிக்க இயலும். ஆனால், டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால், இந்த இயல்பான செயலைச் செய்ய முடியாது.
இவர்கள் எழுத்துக்களை அவற்றின் வரிவடிவத்தைக் கொண்டு அடையாளம் காண்பது முதல், முன்பு படித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்வது வரை ஒவ்வொரு கட்டத்திலும் தடங்கல்களைச் சந்திக்கின்றனர்.உதாரணமாக 'cat' 'tac' ஆகவும், 'pot' 'top'ஆகவும், 'was', 'saw' ஆகவும் இவர்களுக்கு மாறிவிடக்கூடும். அதே போல் 'சுக்கு மிளகு திப்பிலி' என்று எழுதினால் இவர்கள் அதை 'சுக்குமி லகுதி ப்பிலி' என்று பார்க்கக் கூடும். இதனால் இவர்கள் மிக மெதுவாகவும், ஏகப்பட்ட தப்பும் தவறுமாகவும் படிப்பார்கள். ஒரே விதமான எழுத்துப் பிழைகளைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். எழுத்துக்களைத் தலைகீழாகவும் இவர்கள் எழுதக்கூடும்.
டிஸ்லெக்சியா குறைபாடு இருப்பதை சிறுகுழந்தையாக இருக்கும்பொழுதே கண்டறிந்து அதற்கான சிறப்பு ஆசிரியர்களிடம் Dyslexia Specialists Teacher காட்டலாம். இரண்டு அல்லது மூன்று வயதுக்குழந்தையால் 'ABCD' எல்லா எழுத்துக்களையும் உணரவும், உச்சரிக்கவும் முடியும். குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பின்னும் எழுத்துக்களை இனம் காண்பதில் சிக்கல்கள் இருப்பின் குழந்தை மருத்துவர்களிடம் காட்டவேண்டும். இக்குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியும்படி கற்றுத்தரும் சிறப்பு ஆசிரியர்களிடம் சில நாட்கள் கற்றுக்கொண்டால், அதன் பின் அவர்கள் தாமாகவே படிக்கத் தொடங்கிவிடுவர். பழைய முறைகளின் எழுதுதல், படித்தல் மட்டுமின்றி இவர்களுக்கு, ஒலி ஒளிக்காட்சிகள் மூலம் கற்றுக்கொடுத்தல் நல்லது.




MIND ZONE

No comments:

Post a Comment